"உன்ன இப்படி பாத்து எத்தன நாள் ஆச்சு அண்ணாமல" - சிம்புவின் புதிய லுக்கை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் உள்ள நாயகர்களில் சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வருபவர் சிம்பு. அவருடைய படங்கள் என்றாலே சர்ச்சைதான் என்று சொல்லுமளவிற்கு ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு விவகாரத்தில் சிக்கித் தவிக்கிறது. 

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து சூப்பர் ஹிட்டான 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தை தமிழில் சிம்பு நடிக்க 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற பெயரில் லைக்கா நிறுவனம் ரீமேக் செய்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார்கள். 

அந்த படம் வந்த சுவடு தெரியாமல் ஓடிப் போய்விட்டது. அந்தப் படத்தைத் தயாரித்த வகையில் 14 கோடி ரூபாய் நஷ்டம் என படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம், தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மீது நேற்று தெரிவித்த புகாரில் குறிப்பிட்டுள்ளது. 

இதுவரையில் படத்தைத் தயாரித்த நிறுவனங்கள் தங்கள் படத்தால் இவ்வளவு நஷ்டம் என்று வெளிப்படையாகச் சொல்லி பல காலமாயிற்று. தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தை தமிழில் இப்படி நஷ்டப்பட வைத்துவிட்டார்களே என சிம்பு ரசிகர்கள் நேற்றும் வருந்தியிருப்பார்கள்.

எத்தனை நாளைக்கு தான் வருந்திக்கொண்டே இருப்பது என தவித்து வந்த சிம்பு ரசிகர்களுக்கு உருசாகமூட்டும் வகையில் நடிகர் சிம்புவின்புதிய புகைப்படங்கள் சில ரிலீஸ் ஆகியுள்ளன. 

உடல் எடையை தாறு மாறாக குறைத்து மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக நாடு திரும்பியுள்ள சிம்புவின் புதிய லுக் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூட்டோட சூடா, திரும்ப வந்துட்டேன் டா.. என்று சிம்பு ரசிகர்கள் மார் தட்டி சொல்லும் அளவுக்கு ஒரு படத்தை ரிலீஸ் பண்ணுங்க சிம்பு என்று சக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

எத்தனை நாள் ஆச்சு சிம்புவை இப்படி பார்த்து என்று ஆனந்த கண்ணீர் வடிக்காத குறையாக சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.




Blogger இயக்குவது.