கமல்ஹாசனின் இழிவான அரசியலை தோலுரித்த நடிகை மதுமிதாவின் இன்றைய பேட்டி..!
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு, விதிகளை மீறியதாக அந்நிகழ்ச்சியை விட்டு நிகழ்ச்சி அமைப்பினரால் வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. இன்று, செப்டம்பர் 9, விஜய் டிவி ஏற்பாட்டின்படி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பிரச்சினை நடந்த அன்று ஒவ்வொருவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர்களது தனித் திறமையை வெளிப்படுத்த சொன்னார்கள். சுதந்திர தினத்தன்று அது நடந்தது. அன்று ஒரே வரி கவிதை சொன்னேன். நம் ஊரில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது என்று கடவுளிடம் அடிக்கடி வேண்டுவேன்.
அந்த டாஸ்க்கில் 'வருண பகவானும் கர்நாடகாவைச் சேர்ந்தவரோ, மழை வடிவில் கூட தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறாரோ' என்று கவிதை சொன்னேன். அது பற்றி பிக்பாஸ் பின்னர் ஒரு கடிதம் அனுப்பினார். வீட்டுக்குள் அரசியல் பேசக் கூடாது என்றார்.
நான் மழை வேண்டி கவிதை சொன்னதில் எங்கே அரசியல் இருக்கிறது. அப்படி ஒரு கடிதம் வந்ததும் சேரன், கஸ்தூரி தவிர மற்றவர்களின் 'கொடுமை' இன்னும் அதிகமானது. என்னை அவ்வளவு கிண்டலாக, கேலியாக பேசினார்கள். ஒரு 'கேங் ராங்கிங்' போல அது இருந்தது. அது தாங்க முடியாததால்தான் கையை அறுத்துக் கொண்டேன் என்று கூறினார். இதற்கெல்லாம், முழு முதற்காரணம் யார் என்று பார்த்தால், நடிகர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 3 ஆரம்பமான முதல் நாளே நீச்சல் குளத்தில் தண்ணீரை நிரப்ப வேண்டாம் என தண்ணீர் அரசியல் செய்தார். திரும்பும் பக்கமெல்லாம், FROOTI டப்பாக்கள் நிரம்பிய குளிப்சாதனா பெட்டிகள் ஆனால், 400 ரூபாய் கொடுத்து ஒரு சிறு நீச்சல் குளத்தை நிரப்ப தண்ணீர் இல்லை என்று எதிர்மறை அரசியலை தொடங்கினார்.
நடிகை மதுமிதா பேசிய அரசியலை கூடாது என்று கூறிய பிக்பாஸ் நிர்வாகம் கமல்ஹாசன் மேற்கொண்ட தண்ணீர் அரசியலை ஏன் எதிர்த்து கேட்கவில்லை. கமல்ஹாசனின் இந்த இழி அரசியல் நிச்சயம் அரசியல் அறிவுள்ளவர்களுக்கு தெரியும்.
ஆனால், நிகழ்ச்சியை பார்க்கும் நம் வெள்ளந்தியான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் சொட்டு தண்ணீர் இல்லை என்று உலகிற்கு அறிவிக்கும் நிகழ்வாகத்தான் இதனை நாம் பார்க்கவேண்டும். இதனால் உலக நாடுகள் நமக்கு உதவ முன்வருவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டால் உங்களை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லை என்று தெரிந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தங்களது தொழிச்சாலைகளை கொண்டு வருவதை பற்றி யோசிக்க கூட மாட்டார்கள். அப்படியே வந்தாலும், விவசாயம் அழிகிறது என தூண்டிவிட்டு அரசியல் செய்யவும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள். நிதர்சனத்தை உணராத அவரை நம் சனங்களுக்கு நல்ல அரசியல் தலைவர் கிடைப்பது குதிரை கொம்பு தான்.
கமல்ஹாசன் படங்களில் கூறிய தீய சம்பவங்கள் பல நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளன. அதே போல,தண்ணீர் மற்றும் கேஸ் ஆகியவற்றிற்கு மீட்டர் பொருத்தும் சோகமும் நம் நாட்டில் வரலாம் என்று சந்தேகம் எழுகிறது.
கோடை காலத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் காரணமாக நீச்சல் குளத்த்தில் தண்ணீர் நிரப்பாமல் இருந்தார் கமல்ஹாசன். அதில் தவறு எதுவும் இல்லை என்று நீங்கள் கூறுகிறார்கள் என்றால், கடந்த சில வாரங்களுக்கு முன்பிலிருந்தே மழை பெய்து நாட்டில் உள்ள பல அணைகளும் நிரம்பி வழியும் நிலையில், இப்போதும் நீச்சல் குளத்தில் தண்ணீரை நிரப்பாமல் வைத்துள்ளாரே மய்யத்தார் அதற்கு விடை காண முயலுங்கள்.
அதே போல, பத்திரிகையாளர்கள் ஒரு நாள் பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் தங்கியிருந்த போது நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தது என்பது போனஸ் பாய்ன்ட்.