முன்னாள் காதலனுக்கு ஒகே சொல்வாரா நயன்தாரா - எதிர்பார்ப்பில் திரையுலகம்


கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்றாலே அது நம் நயன்தாராதான். அவ்விட தேசத்திலிருந்து தமிழுக்குத் தாவ நினைக்கும் நடிகைகளுக்கெல்லாம் நயன்தான் ஐயர்ன் டானிக். 

த்ரிஷா, சமந்தாவிலிருந்து செகண்ட் இன்னிங்ஸ் ஜோதிகா வரை பலரும் இன்று கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதற்கு முக்கியக் காரணமே, நயன்தாரா நடித்து ஹிட் ஆன ‘மாயா’ படம் கொடுத்த மயக்கம்தான். 

இன்று ரூ. 4-5 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாராவின் வெற்றிக்குப் பின்னால் அவரது பிரமாதமான கதையறிவும் ஸ்கிரிப்ட் சென்ஸும் முக்கியக் காரணங்களாக உள்ளன. மலையாளக் கலப்பின்றித் தமிழ் பேசுபவருக்குத் தமிழைச் சரளமாக எழுதவும் தெரியும் என்பது இன்னொரு ஸ்பெஷல்.

இப்படி பல திறைமைகளை தனக்குள் புதைத்து பூட்டு போட்டு வைத்துள்ள நடிகை நயன்தாரா தன்னுடைய நிஜ வாழ்கையில் பல காதல் சர்ச்சைகளை கடந்து வந்தவர். 

சிம்பு, பிரபு தேவா, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் என பலருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். ஆனால், அவை எதுவும் இவரின் சினிமா வாழ்கையை பாதிக்க வில்லை. இப்போது, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 

இந்நிலையில், தன்னுடைய முன்னாள் காதலன் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க அணுகியுள்ளனர். அறிமுக இயக்குனர் ராஜ்குமார் இயக்கும் இந்த படத்தில் காதல், திருமணம் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

ஏற்கனவே, இது நம்ம ஆளு படத்தில் ஜோடியாக நடித்தனர் சிம்பு, நயன்தாரா. இந்நிலையில், மீண்டும் சிம்புவுடன் நடிக்க ஒகே சொல்வாரா..? என்ற எதிர்பார்ப்பில் திரையுலகம் உள்ளது. அப்படியே ஒகே சொன்னாலும்.. படம் ட்ராப் ஆகாமல் இருக்குமா..? அப்படியே இருந்தாலும் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா..? என அடுத்தடுத்த பஞ்சாயத்துக்கள் நிறைய இருக்கிறது. 

காரணம் சிம்புவின் ராசி அப்படி..!
Blogger இயக்குவது.