என்னது அஜித் படமா..? ஆனாலும், நடிக்க மாட்டேன் - வாய்பை மறுத்து விட்டு இப்போது கதறும் இளம் நடிகை


தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் தவறாமல் குறைந்தபட்சம் இரண்டு திரைப்படங்களுக்கு மேல் வெளியாவது வழக்கம். ஆனால், இதில் ஆரோக்யமான விவாதத்தை, உரையாடலை ஏற்படுத்தும் படங்கள் மிகவும் சொற்பமாகவே வருகின்றன. 

சொல்லப்போனால், ஒரு வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள்தான் மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறுகிறது. தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்கள் பலரும் கடந்த சில வருடங்களாக அதற்கான முயற்சிகளை செய்து வருவதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

அந்த வகையில், அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஒரு நேர்மறையான விவாதப் பொருளாக மாறியது. அஜித் குமார் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமான படங்கள் நிறைய இடம்பெற்றிருந்தாலும், மக்கள் மத்தியில் சிந்தனையை தூண்டக் கூடிய வகையிலான படங்கள் சிலவே உள்ளன. 

அந்த வகையில் முத்திரை பதிக்கும் படமாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் இருந்தது.இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார். படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் காட்சி என்றாலும் அட்டகாசமான, உணர்வுப்பூர்வமான, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் வித்யா பாலன். 


இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டெல்லா-வை தான் படக்குழு அணுகியுள்ளது. ஆனால், பிங்க் படத்தில் அமிதாப் பச்சனின் மனைவி கதாபாத்திரதிற்கு பெரிய ஸ்கோப் எதுவும் இருக்காது. இதனால், தமிழிலும் அப்படித்தான் இருக்கும் என நினைத்து படத்தில் நடிக்க முடியாது என அதிரடியாக மறுத்துவிட்டார் ஊர்வசி ராவ்டெல்லா.


ஆனால், படத்திற்கு கிடைத்த ஒப்பனிங்கை பார்த்ததும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார் ஊர்வசி ராவ்டெல்லா. தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கிடைத்த வாய்பை தவற விட்டுவிட்டேன் என நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.  அஜித் போன்ற மாஸ் நடிகருடன் நடித்திருந்தால் தமிழில் ஒரு நல்ல என்ட்ரியாக அமைந்திருக்கும். ஆனால், இப்படி செய்து விட்டேனே என புலம்பி வருகிறாராம் அம்மணி.
Blogger இயக்குவது.