அச்சு அசல் நஸ்ரியா போலவே இருக்கும் நடிகை அசினின் மகள்..! - வைரலாகும் புகைப்படம்


நடிகை அசின், தனது மகள் அரின் மற்றும் கணவருடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஜெயம் ரவியின் ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி' படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரியானவர் அசின். இதை தொடர்ந்து கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தார். 


இதை தொடர்ந்து மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசியாக ‘ஆல் இஸ் வெல்' என்ற பாலிவுட் படத்தில் நடித்தார். ஆனால் முன்னணி நடிகையாக இருக்கும் போதே 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘மைக்ரோமேக்ஸ்' இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை அசின் திருமணம் செய்து கொண்டார். 


இதையடுத்து அவர் எந்த திரைப்படத்திலும் தலைகாட்டவில்லை. கடந்த 2017 இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் ரகசியமாக வந்திருந்த இந்த தம்பதி அரினின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதுதான் அரினின் புகைப்படங்களை முதல்முறையாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அசினின் குழந்தையை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் நடிகை நஸ்ரியா போலவே இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். இதோ, அவரது புகைப்படம்


Blogger இயக்குவது.