இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தின் ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


இயக்குனர் அட்லி இப்போது விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவருடைய அடுத்த படத்தின் ஹீரோ யார் என்ற கேள்வி எழுந்தது. 


இதனை தொடர்ந்து, சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை அட்லி இயக்குவர் என்ற தகவல்கள் வந்தன. ஆனால், தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தையும் முருகதாஸிற்கே கொடுத்துள்ளார். 

அந்த படத்திற்கு பிறகு தான் இயக்குனர் அட்லி கதையில் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள். எனவே, இயக்குனர் அட்லி ரஜினி படத்திற்கு முன்பே தனது அடுத்த படத்தை முன்னணி நடிகருடன் கூட்டணி அமைத்து இயக்கவுள்ளார். 


ஆம், தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் RRR படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர்-தான் அட்லி இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தமிழில் நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லி அடுத்த கட்டமாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கவுள்ளதை அறிந்த ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.
Powered by Blogger.