"என்ன ம*ருக்கு புதிய கல்வி கொள்கை என்று கேட்டீங்களே சூர்யா..?, இங்க பாருங்க" - வேதனையை வெளிப்படுத்தும் ரசிகர்கள்


நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 


கடலூர் மாவட்டம், புவனகிரியில், நேற்று திரைப்படத்திற்கு அங்கிருக்கும் கல்லூரி மாணவர்கள் சென்றனர். அப்போது, அவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்றனர். 

அவர்களை, புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர், புவனகிரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். முன் அனுமதி வாங்காமல், இதுபோன்று ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில், பேனர் வைக்க கூடாது என்றெல்லாம், கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். 


பின், இனிமேல் அப்படி செய்யமாட்டோம் எனவும் கடிதம் எழுதி வாங்கினார். கடிதம் எழுதிய ஆறு பேரும், தமிழை தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்துள்ளனர். அதில் ஒரு மாணவன் ஆய்வாளர் என்பதை ஆவ்யாளர்னு எழுதிருக்கிறார். 

தொடர்ந்து பேசிய அவர், அந்த கடிதத்தை "மனச திடப்படுத்திக்கிட்டுத்தான், படிச்சேன். படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைச்சது..." என, தனது பேஸ்புக் பக்கத்தில், அம்பேத்கர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். 

இந்த கடிதம் எழுதிய 6 பேரும், கல்லூரி படிக்கின்ற மாணவர்கள். இப்படியே நிலைமை போனால், யார் காப்பான் இவர்களையும்; இவர்களின் தமிழையும் என்று வினவியுள்ளார் ஆய்வாளர் அம்பேத்கர்.

இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் பலரும் என்ன ம*ருக்கு புதிய கல்வி கொள்கை என்று கேட்டீங்களே சூர்யா. இதோ, அதற்கான விடையை ஒரே ஒரு கடிதம் மூலம் உங்களது ரசிகர்களே கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.

புதிய கல்வி கொள்கை மூலம் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு,eஎட்டாம் வகுப்பு என பொதுத்தேர்வு வைத்து மாணவர்கள் திறன் சோதிக்கப்படும். தோல்வியுறும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படும். ஆனால், தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்தும், மாணவர்களை கஷ்டப்படுத்தும் என கூறினார் நடிகர் சூரியா. 

இப்போது இருக்கும் பத்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற கல்வி முறையை பின்பற்றிக்கொண்டிருந்தால் மிக மோசமான எதிர்கால தலைமுறையை நாம் பெறுவோம். பத்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று இருக்கும் போது, கல்வி தரத்தை மேம்படுத்துங்கள் என்பது வீம்பு பேச்சாக தான் இருக்க முடியும். 

ஆசிரியர்கள் என்ன சொல்லிக்கொடுத்தாலும் எல்லோரும் பாஸ் என்ற நிலை இருக்கும் போது ஆசிரியர்கள் எப்படி சிரத்தை எடுத்து சொல்லிக்கொடுப்பார்கள். அவர்களுக்கு முறையாக பாடம் நடத்த வேண்டும் என்ற எண்ணமே வர வாய்ப்பில்லை. புதிய கல்விக்கொள்கை மிகவும் அவசியமான ஒன்று என்பதற்கு உங்களது ரசிகர்கள் எழுதியுள்ள இந்த கடிதமே போதும் என பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.




Powered by Blogger.