கைவிட்ட விக்ரம் - கை கொடுத்த சூர்யா - மீண்டு வருவாரா பிரபல இயக்குனர் ..?
இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர். இவரது படங்களுக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே.
கடந்த 2009ம் ஆண்டு நான் கடவுள் என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து, அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படங்களை இயக்கினார்.
இந்நிலையில் தான் தெலுங்கில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த "அர்ஜுன் ரெட்டி" படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமை வைத்து அந்த படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குனர் பாலா விடம் கொடுத்தார்.
ஆனால், அந்த படத்தின் அவுட்புட் நம்பிக்கை தரும் படி இல்லை என்பதால் எடுத்த படத்தை எல்லாம் தூக்கி தூர வீசி விட்டு புதிய இயக்குனரிடம் பொறுப்பை கொடுத்து விட்டார் விக்ரம். இதனால், விக்ரமிற்கும் பாலாவிற்கும் பனிப்போர் மூண்டது.
இந்நிலையில், அடுத்த எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார் பாலாவிற்கு நடிகர் சூர்யா கைகொடுத்துள்ளார். பாலா இயக்கம் அடுத்த படத்தில் சூர்யா, அதர்வா, ஆர்யா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.