"படையப்பா" படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா..? - 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான புகைப்படம்


ரஜினிகாந்திற்கு ப்ளாக் பஸ்டர் கொடுத்த படங்களில் ஒன்று கடந்த 1999-ம் ஆண்டு வெளியான "படையப்பா". இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன் என்று நட்சத்திர பட்டாளமே நடித்த படம். 

இப்படத்தில், ஹீரோயினாக நடித்த சௌந்தர்யாவின் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தது சௌந்தர்யா இல்லை என்றும் வேறு நடிகை என்றும் அதற்கான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர் K.S ரவிக்குமார், நக்மா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அந்த புகைப்படம்தான் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில், முதன் முதலாக ஹீரோயினாக நடிக்க நடிகை நக்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சில நாட்கள் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டுள்ளார். 

ஆனால் அதன் பிறகு என்ன ஆச்சுன்னு தெரியல. படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவே இல்லை.இதன் காரணமாக, அவசர அவசரமாக சௌந்தர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

இப்படத்தில் வசுந்தரா என்ற ரோலில் நடித்திருப்பார்.படத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வசுந்தரா, நீலாம்பரியாக வந்த ரம்யா கிருஷ்ணனின் வீட்டு வேலைக்காரியாக நடித்துள்ளார். 

மேலும், பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறுவதற்கு உதாரணமாகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இப்படத்தில் நக்மா நடித்திருந்தால், இந்த அளவிற்கு ஹிட் கொடுத்திருக்குமா? என்பது சந்தேகம் தான்.


Blogger இயக்குவது.