இதுவரை எந்த பிக்பாஸ் 3 போட்டியாளரும் எட்டி கூட பார்க்காத சக போட்டியாளரின் வீட்டிற்கு சென்ற சேரன்..!


பிக்பாஸ் சீசன் 3 முடிந்துள்ள நிலையில் வழக்கமாக போட்டியாளர்கள் அனைவரும் பரஸ்பரம் அவரவர் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து சிலாகிப்பது எல்லாம் நடந்து முடிந்து விட்டது. 

ஆனால்,பிக்பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவரான நடிகை மதுமிதா-வின் வீட்டிற்கு எந்த பிக்பாஸ் போட்டியாளரும் இதுவரை செல்லவில்லை. நடிகர் சரவணன் வீட்டிற்கு கூட சென்று வந்து விட்டார்கள். 

இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான சேரன் மதுமிதா வீட்டிக்று சென்று வந்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

இந்த சந்திப்பு கரித்து அவர் கூறியதாவது, " பிக்பாஸ் வீட்டில் மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடனும் நேர்மையுடனும் பகிர்ந்ததில் மதுமிதாவும் ஒருவர்.. நலம் விசாரிக்க இன்று அவர் இல்லம் சென்று சந்தித்தேன்.. உணவருந்தினேன்.. உபசரிப்பும் பேசிய தருணங்களும் மனதுக்கு மகிழ்வை தந்தது. மதுமிதாவின் வாழ்வு சிறக்கட்டும்.." என கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.