50 வயதிலும் இப்படியா..? - மனிஷா கொய்ராலா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..!


தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பாம்பாய்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கமலஹாசனுடன் 'இந்தியன்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பாபா' அர்ஜுனுடன் 'முதல்வன்', உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. 

இவர் 90-களில் முன்னணி நடிகையாக இருந்த போது, மிகவும் கவர்ச்சியாக நடித்து பல முன்னணி நடிகைகளுக்கு, டஃப், போட்டி கொடுத்த இவர், இதுவரை எந்த படத்திலும் நீச்சல் உடையில் நடித்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இ

ந்நிலையில் தற்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ்' என்ற படத்தில் மனுஷா கொய்ராலா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளார். தற்போது, நீச்சல் குளத்தில் நீராடும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 50 வயதிலும் இப்படி இளமையாகவே இருக்கிறீர்களே என்று வியந்து வருகிறார்கள்.


Powered by Blogger.