"பிகில்" அடிச்சா அடிக்கட்டும் - நாங்களும் வரோம்..! - தீபாவளி ரேஸில் "தளபதி64" இயக்குனரின் படம்..! - அனல் பறக்கும் போட்டி..!


மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம்tதீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் "கைதி" திரைப்படத்தையும் அதே நாளில் இறக்குவதில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் விடாப்பீடியாக உள்ளது.

இதில், ப்யூட்டி என்னவென்றால் இந்த "கைதி" படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.