B மற்றும் C சென்டர்களில் கெத்து காட்டும் "நம்ம வீட்டு பிள்ளை" - அதிர வைக்கும் ஆறு நாள் வசூல்..!


கடந்த 27-ம் தேதி வெளியான "நம்ம வீட்டு பிள்ளை" திரைப்படமா இல்லை திருவிழாவா என்று எண்ண வைக்கும் வகையில் அத்தனை நட்சத்திரங்களை சேர்த்து அவர்கள் அத்தனை பேருக்கும் கதாபாத்திரங்கள். 

அவர்களுக்கான சுவாரசியமான சுபாவங்கள் எழுதி நம் மனதில் நிற்க வைப்பதில் தேர்ந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். அவரது கடந்த படமான 'கடைக்குட்டி சிங்கம்' பெரும் வெற்றி பெற இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம். 'கடைக்குட்டி சிங்கம்' வெற்றி தந்த உற்சாகத்தில் மீண்டும் அதே ஃபார்முலாவில் எடுக்கப்பட்டுள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. 

இந்த ஃபார்முலாவில் என்னவெல்லாம் இருக்கின்றன? நிறைய உறவுகள் கொண்ட பெரிய குடும்பம், வித விதமான பாத்திரங்கள், அதில் அனைவரையும் இணைக்கக்கூடிய மையமாக நாயகன், உறவுகளுக்குள் உள்ள மகிழ்ச்சி, கசப்பு, ஒரு பிரச்சனை, விரிசல், பின் நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ். இதுதான் அந்த ஃபார்முலாவின் முக்கிய அங்கங்கள். இவை அனைத்தும் மிஸ் ஆகாமல் சேர்த்திருக்கிறார் பாண்டிராஜ். 

B மற்றும் C சென்டர்களில் அடித்து நொறுக்கும் வசூலுடன் வெற்றி நடை போட்டு வருகின்றது நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம். இப்படம் தமிழகத்தில் மட்டும் 6 நாட்களில் ரூ 35 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், எப்படியும் ரூ 50 கோடி கிளப்பில் இப்படம் இணையும் என கூறுகிறார்கள்

மேலும், தற்போது சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை விடுமுறை வரவிருப்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Powered by Blogger.