அட்லி-ஷாருக்கான் இணையும் படத்தின் தலைப்பு - ஆரம்பமே சர்ச்சையா..?
கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் ஆர்யா, சந்தானம், சத்யராஜ், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த கலாத்திலும் ஒரே திரையரங்கில் அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ.
இதனை தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அட்லீயின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் இந்தி என மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்திற்கு "சங்கி" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் தொடக்கத்திலேயே சர்ச்சையா..? என்று கூறி வருகிறார்கள்.