ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் பிகில் படத்தை முந்தி கைதி புதிய சாதனை - அதிரடி ரிப்போர்ட்


கடந்த 25-ம் தேதி பிகில் மற்றும் கைதி என இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் ரிலீஸ் ஆகின. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் கலைவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், கைதி சிறப்பான விமர்சனங்களை பெற்று ரசிகர்களை கவர்ந்தது. 

இந்நிலையில், பிரபல ஆன்லைன் சினிமா டிக்கட் புக்கிங் நிறுவனமான புக் மை ஷோ-வில் பிகில் படத்தை முந்தியுள்ளது கைதி. தமிழில் வெளியான பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கு மொழியில் டப் செய்யபட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாவட்டங்களில் வெளியானது.

ஏற்கனவே, தெலுங்கில் நல்ல ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் கார்த்தி தன்னுடைய கைதி படத்தின் மூலம் பிகில் படத்தை காட்டிலும் அதிக வசூல் செய்துள்ளார்.மேலும்,ஒட்டுமொத்தமாக பிகில் படத்தின் ஆன்லைன் புக்கிங்கை விட அதிகமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்று புதிய சாதனையையும் படைத்துள்ளது கைதி.
Blogger இயக்குவது.