முதல் நாளை விட இரண்டாம் நாள் கைதி வசூல் எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது தெரியுமா..?
நடிகர் கார்த்தி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் "கைதி". இந்த படத்தை தயாரிப்பளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். கடந்த 25-ம் தேதி பிகில் படத்திற்கு போட்டியாக வந்த இந்த படம் பிகில் படத்தை காட்டிலும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
அந்த வகையில், விமர்சன ரீதியாக இந்த தீபாவளி வின்னர் "கைதி" தான். இந்நிலையில், இந்த படம் முதல் நாள் வசூலித்ததை விட இரண்டாம் நாள் அதிக வசூல் செய்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆம்,ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடிகர் கார்த்திக்கு சொல்லிக்கொள்ளும் படி ரசிகர்கள் வட்டம் இருக்கின்றது. கடந்த சில படங்கள் தோல்வியை தழுவிய காரணத்தினால் குறைந்திருந்த அவரது தெலுங்கு மார்கெட் நல்ல விமர்சனங்களை பெற்ற கைதி படத்தினால் மீண்டும் உயர்ந்துள்ளது.
இதனால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் முதல் நாள் வசூலை விட மூன்று மடங்கு அதிகமாக இரண்டாம் நாள் வசூல் செய்து ரசிகர்களின் மனதை கைது செய்துள்ளார் இந்த "கைதி".
இதனால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் முதல் நாள் வசூலை விட மூன்று மடங்கு அதிகமாக இரண்டாம் நாள் வசூல் செய்து ரசிகர்களின் மனதை கைது செய்துள்ளார் இந்த "கைதி".