இயக்குனர் அட்லி குறித்து இணையத்தில் தீயாய் பரவும் வதந்தி..!


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில் இந்த படம் ரூபாய் நூற்று என்பது கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு மட்டுமே ரூபாய் ஐம்பது கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. 

அதே சமயம் "பிகில்" படத்திற்காக இயக்குனர் அட்லீ ரூபாய் இருபத்தி ஐந்து கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டாலும் இதுகுறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 


இயக்குனர் அட்லி 'பிகில்' படத்தை அடுத்து ஷாருக்கான் படத்தை அட்லீ இயக்க உள்ளதாகவும் ஷாருக்கான் படத்திற்காக ரூபாய் நாற்பது கோடி அட்லீக்கு சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது. 

நடிகர் ஷாருக்கான் படத்தை அட்லீ இயக்குவதே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் அதற்குள் சம்பளம் குறித்த வதந்தி இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.
Blogger இயக்குவது.