பிக்பாஸ் குழு செய்த தில்லாலங்கடி வேலை - வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மதுமிதாவின் கணவர்..!
தமிழ் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் தற்கொலை முயற்சி செய்த காரணத்தினால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா.
நிகழ்ச்சியை விட்டு வெளிய வந்த கையோடு அவர் பல குற்றச்சாட்டுகளை வைத்தார். ஆனால் இதுவரை தொலைக்காட்சி பக்கத்தில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
இந்த நிலையில் மதுமிதாவின் கணவர் கடந்த 6-ம் தேதி நடந்த பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சிக்கு போகாத நிலையில் அவர் வந்தது போல் நிகழ்ச்சியில் எடிட் செய்துள்ளனர்.
இதைப்பார்த்த அவர் வீடியோவுடன் நான் நிகழ்ச்சி போகவில்லை எப்படி இப்படி நடந்தது என ஆதாரத்துடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் எப்படி இப்படி ஒரு கேவலமான விஷயத்தை செய்தார்கள் என கோபமாக டுவிட் செய்து வருகின்றனர்.