பிகில் பட காட்சிகள் காப்பி சர்ச்சை - கொதித்தெழுந்த இயக்குனர் அட்லி
பிரபல இயக்குனர் அட்லீ மீது அவர் இயக்கிய முதல் படமான ராஜா ராணி முதல் பிகில் வரை கதை திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிகில் திரைப்படத்தில் கொஞ்சம் அதிகமாகவே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கொதித்தெழுந்து இருக்கிறார் அட்லீ. சக்தே இந்தியா, இறுதி சுற்று, கனா என பிகில் திரைப்படம் பல திரைப்படங்களின் கலவை என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், விமர்சனங்கள் குறித்து முதன் முறையாக மனம் திறந்து இருக்கிறார்.
அவர் கூறுகையில், ‘நான் காப்பி அடித்ததாக கூறப்படும் அந்த படங்களை நானும் பார்த்திருக்கிறேன் ரசித்திருக்கிறேன். அதன் தாக்கங்கள் தென்பட்டு இருக்கலாம். ஆனால் அதனை மையமாக வைத்து நான் என் கதைகளை எழுதவில்லை.
என் கதை நானே எழுதிய சொந்த கதை. இது குறித்து யார் விமர்சித்தாலும் எனக்கு கவலை இல்லை’ என உணர்ச்சி போங்க பேசி இருக்கிறார்.