பிக்பாஸ் பினாலேவில் ஏன் கலந்து கொள்ளவில்லை - சரவணன் அதிரடி பதில்
பிக்பாஸ் 3வது சீசன் ஒரு வழியாக 100 நாட்கள் கடந்து முடிந்துவிட்டது. போட்டியாளர்கள் இன்னும் பிக்பாஸ் கொண்டாட்டத்தில் இருந்து வெளியே வரவில்லை.
எல்லா போட்டியாளர்களின் வீட்டிற்கும் மாற்றி மாற்றி அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அண்மையில் சில போட்டியாளர்கள் சேரன் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் ஒருவரான சரவணனிடம் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சிக்கு ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலலளித்த சரவணன், "இனி பிக்பாஸ் பற்றி பேச விரும்பவில்லை என்றும் அதையும் தாண்டி தனது வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கிறது" என அதிரடியாக கூறியுள்ளார்.