"அஜித்தை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க.?" - கேள்வி கேட்ட ரசிகர் - ஷாருக்கான் "நச்" பதில்..!
ஒவ்வொரு பிரபலங்களுக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் பிரபலங்களே ஒருவருக்கு ரசிகர் பட்டாளமாக இருக்குமென்றால் அதில் அஜித்குமார் முக்கியமானவர்.
'தல' என்ற செல்லப்பெயருடன் கோலிவுட்டில் வலம் வரும் அஜித்துக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிவருவது மறுக்கமுடியாத ஒன்று. இன்றைய தேதிக்கு அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் அஜித்குமார்.
வருடத்துக்கு இரண்டு படமே அதிசயம் என்று இருந்தாலும், அஜித்துக்கான ரசிகர் பட்டாளம் துளியும் குறையாது. எத்தனையோ தோல்விகளை கொடுத்து சினிமாவில் போராடிக்கொண்டிருந்த வேளையிலும் அஜித்தை அவர் ரசிகர்கள் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கவில்லை என்பது இன்றளவும் பலரையும் ஆச்சரியப்பட வைக்கின்றது.
இப்போது கூட அஜித் ரசிகர்களிடம் "அஜித்தை எந்த படத்தில் இருந்து ரசிக்க ஆரம்பித்தீர்கள்..?" என்று கேட்டுப்பாருங்கள். அதில் பெரும்பாலானோர் நான் அஜித்தின் படங்களுக்கு ரசிகன் இல்லை. அஜித் என்ன தனி மனிதனின் ரசிகன் என்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு அஜித்தை நேசிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
இந்நிலையில், அஜித்தின் நீண்டகால நண்பராக இருக்கும் நடிகை ஷாருக்கான்sசமீபத்தில் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ரசிகர் ஒருவர் அஜித்குமாரை பற்று ஒரே வார்த்தையில் கூறுங்கள் பார்க்கலாம் என்று கேட்டார்.
அதற்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த, ஷாருக்கான் "என்னுடைய நண்பர்" என்று நச்சென கூறியுள்ளார்.