சரவணன், மதுமிதா-வை கழட்டி விட்ட பிக்பாஸ் - ரசிகர்கள் அதிருப்தி
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 100 நாட்கள் கடந்த நிலையில் கடந்த வார நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேறிய பிறகு, இந்த வாரம் முழுவதும் விருந்தினர்களை வரவழைத்தே நிகழ்ச்சியை நகர்த்தினார்கள்.
நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். சில கட்டாயத்தினால் வெளியேற்றிய சரவணன், மதுமிதா ஆகியோரை மட்டும் அழைக்கப்படாமல் கழட்டி விடப்பட்டனர்.
அனைத்து போட்டியாளர்கள் முன்பும் இந்த சீசனின் சில முக்கிய காட்சிகளைத் தொகுத்து 10 நிமிடங்களுக்கும் மேலாக காட்டினார்கள். அதிலும் சரவணன், மதுமிதா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கவனமாகத் தவிர்க்கப்பட்டன.
சரவணன், மதுமிதா அழைக்கப்படாதது குறித்து அதிருப்தியான ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இறுதி நிகழ்ச்சியிலாவது அவர்களை கலந்து கொள்ள அவர்கள் இருவரும் அழைக்கப்படுவார்களா..? அல்லது தவிர்க்கப்படுவார்களா..? என்பது இன்று தெரிந்துவிடும்.