போட்றா வெடிய..! - வெளியான பிகில் டீசர் அப்டேட்..! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்


பிகில் திரைப்படம் அக்டோபர் மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர்ரை வெளியிடாமல் தாமதித்துவரும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் மீது விஜய் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ளது பிகில் திரைப்படம். நயன்தாரா, யோகி பாபு, விவேக், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் பிகில் படத்தின் ரிலீசுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

கால்பந்து விளையாட்டு மற்றும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 

அதில் நடிகர் விஜய் பேசிய பல கருத்துகள் அரசியலில் பரபரப்பை கிளப்பியது மட்டுமல்லாமல் பட்டிமன்ற பேச்சாளர் பேசியதை நடிகர் விஜய் காப்பி அடித்துவிட்டார் என்பதுபோன்ற கருத்துக்களும் சமூகவலைதளங்களில் பரவியது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, படமே இன்னும் 20 நாள்-ல ரிலீஸ் ஆகப்போகுது..! இன்னும் டீசரே ரிலீஸ் பண்ணாம இருக்கீங்க என்று ரசிகர்கள் விரக்தியின் உச்சிக்கே சென்றனர். 

இந்த நிலையில் AGS நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கல்பாத்தி ஒரு டுவிட் போட்டுள்ளார்.

அதில் பிகில் பட அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய முயற்சி செய்கிறோம் என பதிவு செய்துள்ளார். வரும் திங்கட்கிழமை டீஸர் எப்போதும் வரும் என்ற அறிவிப்பு தெரிய வருமாம்.
Powered by Blogger.