அந்த காட்சியை நீக்குங்க - அசுரன் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பிரபல தமிழ் நடிகர்..!
அசுரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. படத்தின் முதல் நாள், முதற்காட்சியை பார்த்த விவரம் அறிந்த பலருக்கும் நிச்சயம் இந்த படத்தினால் வம்பு வழக்குகள் வரும் என தெரிந்திருக்கும்.
இந்த படத்தின் கதியை இரண்டு குடும்பத்திற்குள் நடக்கும் சண்டையாக அமைத்திருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாடை வீசும் படி காட்சிகளை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளனர். அது தான் படத்திற்கு பலமாக இருக்கும் என படக்குழு எண்ணியிருக்கலாம்.
ஏனென்றால், வழக்கமான இரு குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை என்றால் படம் போனியாகது. இது போன்ற ஏதாவது ஆயுதத்தை தூக்கினால் முடியும். அதனை இப்போது உள்ள இயக்குனர்கள் நன்றாக புரிந்து வைத்துக்கொண்டிருகிறார்கள்.
படத்தின் இறுதி காட்சியில் கூறும் விஷயத்தை படம் முழுக்க பதிவு செய்திருக்க வேண்டும். படம் முழுதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது இன்னொரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வன்மத்தை தூண்டும் படியான காட்சிகள் தான் நிரம்பியிருந்தன.
படத்தின் க்ளைமாக்சில் மட்டும் இவற்றை கடந்து செல்லவேண்டும். நன்றாக படித்து அதிகாரத்தை பிடிக்க வேண்டும். அப்படி அதிகாரத்தை பிடித்த பின்பு அவர்கள் நமக்கு செய்த அதே தவறை நாமும் செய்ய கூடாது. என்ற அரை நிமிட தத்துவத்தை பேசி முடித்திருகிறார்கள்.
இது எப்படி என்றால், எல்லாவற்றையும் காட்டி விட்டு, இறுதியாக இதையெல்லாம் செய்யக்கூடாது என்று கூறும் "A" படங்கள் போல தான். 50,60 வருடங்களுக்கு முன்பு நடந்த செருப்பு கலாச்சாரத்தை இப்போது படம் போட்டு காட்டுவதால் என்ன பயன்.
குறிப்பிட்ட அந்த சமூகத்தினருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையையும், மாற்று சமூகத்தினர் மீது ஒரு வித வெறுப்பையும் வன்மத்தையும் கொடுக்குமா..? கொடுக்காதா..? இது இயக்குனர்களுக்கு தெரியாதா..? என்று கேட்பீர்கள். இதற்கு பின்பு தான் அரசியல் இருக்கிறது. அது நமக்கு தேவையில்லாத விஷயம்.
சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். அசுரன் படத்தில் இடம்பெற்றுள்ள ஆண்டபரம்பரை என்கிற வார்த்தையை நீக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் போர்க்கொடி தூக்கியுள்ளார். "ஆண்டபரம்பரை
என்றால் நாங்கதான். முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ள
காட்சியை நீக்கவேண்டும்" என்று அவர் வெளியிட அறிக்கையில் கூறியுள்ளார்.
இத்தனைக்கும், கருணாஸின் மகன் தான் இந்த படத்தில் தனுசின் இளைய மகனாக "சிதம்பரம்" என்ற முக்கியமான ரோலில் கதை முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.