ஹீரோயின் இல்லை, பாடல் இல்லை, காமெடி இல்லை - "கைதி" எப்படி இருக்கு.? - படம் பார்த்தவர்கள் என்ன சொல்றாங்க..! - வாங்க பாக்கலாம்


மாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய ‘கைதி’ இன்று ரிலீசாகியுள்ளது. 

இதனை தொடர்ந்து, தற்போது தமிழகமே எதிர்பார்க்கும் விஜய் 64 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம்குறித்துலோகேஷ் கனகராஜ் கூறுகையில், இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே கதாநாயகி தேவைப்படவில்லை.

அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.படத்தில் கார்த்தியை மையப்படுத்தி தான் கதை. அவரைச் சுற்றி தான் எல்லாமும் நடக்கும். இந்தப்படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் பருத்தி வீரன் போல இருப்பதாக சொன்னார்கள். 

ஆனால் அது எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது என உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக்கொண்டதால் தான் இந்தப்படமே உருவானது. என்று கூறியிருந்தார்.

கதைப்படி, ஒட்டுமொத சிறையையே தன்னுடைய உள்ளங்கையில் வைத்திருக்கும் கதாநாயகன் கார்த்தி நன்நடத்தை காரணமாக ஒருநாள் ரிலீஸ் செய்யபடுகிறார்.

ரிலீஸ் ஆகி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த நாயகனை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் மீண்டும் கைது செய்து ஜீப்பில் அழைத்து செல்கிறது. இறுதியாக, அழைத்து சென்ற போலீஸ் சக போலீஸ்காரர்களுடன் ஒரு ஆபத்தில் சிக்க அவர்களை காப்பற்ற நாயகன் உதவி தேவைப்படுகிறது.

ஒரு பக்கம் பிறந்ததில் இருந்து பார்க்காத தன் பெண் குழந்தை. மறு பக்கம் போலீஸ் அதிகாரிகளை காப்பருவது என இரண்டு பெரும் பொறுப்புகள் நாயகன் தோளில் ஏற்றி வைக்கப்படுகின்றது.

பிறகு ஒரு நாள் இரவில்  நான்கு மணி நேரத்தில் நடைபெறும் சம்பவங்கள் தான் கைதி. ஆங்கிலப்படம், ஸ்பானிஸ் படம், கொரியன் படங்களில் மட்டுமே சாத்தியமான விறுவிறுப்பு கைதியில் இருக்கிறது.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் படத்திற்குள் வந்துவிடுகிறோம். கார்த்தி ஏன் சிறைக்கு சென்றால் என்பதில் இருந்து அதன் பிறகு இடைவேளையின் வரை நெஞ்சுக்கு திக் என்று இருக்கும் வகையில் பல காட்சி.

படம் படுவேகம். எந்த ஒரு காட்சியையும் நம்மால் ஊகிக்க முடியவில்லை. பாடல் இல்லாதது மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட். பாடல்கள் இடம்பெற்றிருந்தால் நிச்சயம் கதையின் வேகம் குறைந்திருக்கும். படத்தில் ஹீரோயின் இல்லாததும் படத்தில் குறையாகவே தெரியவில்லை.

வசனங்கள் எல்லாம் சுளீர் ரகம். பின்னணி இசை மிரட்டல். ஒளிப்பதிவு சொல்லவே வேண்டாம். அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளார் லோகேஷ் கனகராஜ். சினிமா ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் பார்கக் வேண்டிய படம் கைதி. தீபாவளிக்கு மிகச்சிறப்பான ட்ரீட் கொடுத்துள்ளனர் கார்த்தி – லோகேஸ் கனகராஜ் கூட்டணி.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றாங்க.? வாங்க பாக்கலாம்.



Powered by Blogger.