"பிகில்"ன்னு நெனச்சி "கைதி" டிக்கெட் எடுத்துட்டேன் என்று கூறிய விஜய் ரசிகரை கலாய்த்த "கைதி" தயாரிப்பாளர்


‘பிகில்’ திரைப்படம் வெளியாகும் தேதி நெருங்கி வருவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே நேரம், பட வெளியீட்டில் இருக்கும் சில சிக்கல்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

விஜய்யின் முந்தைய திரைப்படங்கள் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததால், அவரது திரைப்படங்களுக்கான பட்ஜெட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. அந்தவகையில், அவர் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வரும் 'பிகில்' திரைப்படம் விஜய்யின் சம்பளத்தோடு சேர்த்து சுமார் 130 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இதனால், அதனை ஈடுசெய்ய வேண்டிய வியாபாரமும் அவசியமாகி உள்ளது. அதே நேரம், ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு, அரசியல் ரீதியாக படத்திற்கு சிக்கலை ஏற்படுத்துமோ? என்கிற குழப்பத்தையும் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு 25-ம் தேதி வெள்ளிக்கிழமையே ‘பிகில்’ வெளியாகும் என அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. படத்தின் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கி விட்டது. 

இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் "பிகில்" என்று நினைத்து "கைதி "படத்திற்கு டிக்கெட் புக் செய்து விட்டேன். அந்த டிக்கெட்டை வைத்துக்கொண்டு என்ன பண்றதுன்னு தெரியல..? என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

இதனை பார்த்த "கைதி" படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு "தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு. ஆனா, அறிவு இல்ல" என்று கலாய்த்துள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகிறார்கள்.

Blogger இயக்குவது.