மக்கள் செல்வன் விஜய் சேதுபதியா இந்த விளம்பரத்தில் நடித்திருப்பது..? - ரசிகர்கள் வேதனை - வைரலாகும் புகைப்படம்


இன்றைய சூழ்நிலையில் அனைத்துமே ஆன்லைன். ஆப்பம் முதல் ஆகாய விமானம் வரை எல்லாமே ஆன்லைன். ஓட்டலுக்கு சென்று ஆர்டர் கொடுத்த காலம் போய் வீட்டில் உட்காந்து கொண்டு சாப்பாடு ஆர்டர் செய்யலாம்.

மக்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் இந்த ஆன்லைன் வணிகம் நம் அருகில் நம்மை நம்பி கடை விரித்த சிறு மற்றும் குறு வியாபாரிகளின் கழுத்தை நெரிக்கிறது. 

அடுத்த தெருவில் இருக்கும் ஓட்டலில் சென்று இட்லி சாப்பிட கஷ்டம். ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு வீட்டிலேயே சாப்பிடலாம் என்ற வசதி உள்ளங்கையில் வந்து விட்டது. இது தொடரும் பட்சத்தில் அருகில் இருக்கும் கடைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும் அபாயம் உள்ளது என்பது உண்மை. 

இந்நிலையில், மளிகை பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுதுப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதிநடித்துள்ளார். இது சிறு மற்றும் குறு வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் என ரசிகர்கள் அதிர்சியாகியுள்ளனர். 

சமீபகாலமாக, நடிப்பு தாண்டி அரசியல் கருத்துகளையும் பதிவு செய்து வரும் விஜய் சேதுபதி இது போன்ற விளம்பரங்களில் நடிக்கலாமா..? பலசரக்கு கடைகளுக்கு ஆப்பு வைக்கும் அந்த ஆப் தேவையா..?என நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள்.


Blogger இயக்குவது.