ஐந்தாம் நாளில் பிகில் வசூலை முந்திய சாதனை - மாஸ் காட்டும் "கைதி"
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமான ஓடி வருகின்றது. அதே நாளில் வெளியான கைதி திரைப்படம் நல்ல விமர்சங்களை பெற்று நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து கொண்டே வந்தது.
இந்நிலையில்,நேற்று அமெரிக்காவில் பிகில் படத்தின் வசூலை விட அதிகமாக வசூல் செய்துள்ளது கைதி. இத்தனைக்கும், பிகில் படத்தை விட குறைவான திரைரங்குகளில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் கைதி இந்த சாதனையை செய்து மாஸ் கட்டியுள்ளது.
தற்போது வந்துள்ள தகவலின் படி, அமெரிக்காவில் நேற்று மட்டும் பிகில் திரைப்படம் மொத்தமுள்ள 90 இடங்களில் திரையிடப்பட்ட 20 ஆயிரம் டாலர்களை வசூலிக்க, வெறும் 49 இடங்களில் மட்டும் திரையிடப்பட்ட கைதி திரைப்படம் 21 ஆயிரம் டாலர்களை வசூல் செய்துள்ளது.
விஜய் படத்தின் வசூலை தனது ஐந்தாவது நாளில் அமெரிக்காவில் முடியடிதுள்ள கைதி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள ஆதரவு இதன் மூலம் தெரியவந்துள்ளது.