விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கதில் நடிக்கவுள்ள நடிகர் - சற்று முன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். கடந்த 4-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், படம் நன்றாக வந்திருப்பதாக பேட்டியளித்தார். 

இதனிடையே தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த ரஜினிகாந்த், இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

மேலும் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும், கிராமப்புறத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டுவந்தநிலையில்,சற்று முன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதோ அந்த அறிவிப்பு,
Powered by Blogger.