கொலு கொலுவென மாறிய நடிகை ப்ரியாமணி - வைரலாகும் அசத்தல் புகைப்படங்கள்
நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த அது ஒரு கனா காலம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கார்த்தியுடன் பருத்திவீரன் படத்தில் நடித்த பிறகுதான் பிரபலமானார்.
அதில் வரும் முத்தழகு என்ற கேரக்டர் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.
கவர்ச்சி என்பது சில காலம் என்பது பிரியாமணி சினிமா வாழ்க்கையில் உண்மையானது. மற்ற மொழி படங்களில் கவர்ச்சிக்காக மட்டுமே பிரியாமணி சேர்க்கப்பட்டார்.
வழக்கம் போல் மார்க்கெட் இறந்த பிறகு திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகளுடன் தானும் கொலு பொம்மையாக மாறி நின்றுகொண்டிருக்கும் பிரியாமணியின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.