தமிழ் சினிமா ஃபார்முலா எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் - நான் எடுக்குறேன் படம் - மிரட்டிய லோகேஷ் கனகராஜ்


கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் நேற்று (25-ம் தேதி) ரிலீஸ் ஆனது . லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பிகிலுக்கு போட்டியாக களம் இறங்கிய இந்தப் படம் வசூலில் ஈடு கொடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பிகில் திரைப்படத்தில் ஆமை வேக திரைக்கதயாலும், விஜய்க்கு கொடுக்கபட்ட ஓவர் பில்டப் காட்சிகளாலும், விஜய்-நயன்தாரா காதல் காட்சிகள் போன்ற போரான விஷயங்களால் கலைவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. 

மறுப்பக்கம், விஜய்யின் அடுத்த படமான தளபதி64 படத்தை இயக்கவுள்ள  இயக்குனர் லோகேஷ்  கனகராஜ்  இயக்கத்தில் வெளியாகியுள்ள கைதி. இவர் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான "மாநகரம்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் படத்தோட டைரக்டர் யாருப்பா.? என்று தேடிப்பேசும் படமாக அமைந்தது. 

இந்நிலையில்,தன்னுடைய இரண்டாவது படமாக "கைதி" படத்தை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், நாலு பாட்டு, நாலு ஃபைட்டு, ஒரு ஐட்டம் பாடல், இவையனைத்தும் இணைக்க ஒருவரி கதை என்ற வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலாவை தூக்கி தூரமாக வைத்து விட்டு இவை எதுவுமே இல்லாமல் கதையை மட்டுமே எடுத்துக்கொண்டு கதாநாயகனை தேடாமல் கதைக்கான நாயகனை தேடி பிடித்து நடிக்க வைத்து மிரட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

நடிகர் கார்த்திக்கு இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்றே சொல்ல வேண்டும். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை இருக்கும் பரபரப்பு மற்றும் பயமே இந்த படத்தின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்து விட்டது.இந்நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் லோகேஷ் கனகராஜிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.  
Powered by Blogger.