அவரை சந்திக்க வேண்டும் என ஆவலுடன் உள்ளேன் - நடிகை தமன்னா ஒப்பன் டாக்


நடிகை தமன்னா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருக்கிறார். 

சமீப காலமாக சொல்லிக்கொள்ளும் படி பெரிய படங்கள் அமையவில்லை. ஆனால், சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் அவரின் நடிப்புக்கு கிடைத்த வரவேற்ப்பு அவருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

சைரா படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை மிஞ்சி விட்டது தமன்னாவின் நடிப்பு என்ற வந்த விமர்சனங்களால் மீண்டும் பழைய உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறார் அம்மணி. 

இந்நிலையில், தமன்னா நடிப்பில் பெட்ரோமாக்ஸ் என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து நடிகை தமன்னா கூறுகையில், இந்த படத்தின் தலைப்பான "பெட்ரோமாக்ஸ்" பற்றியும், அந்த வார்த்தை இடம்பெற்ற கவுண்டமணி - செந்தில் ஆகியோர் நடித்து ஹிட் அடித்த காமெடி காட்சி பற்றி ரோகின் விளக்கினார். 

அந்த காட்சியை பார்த்தவுடனே கவுண்டமணி சாரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது. அது இன்னும் நடக்கவில்லை. நிச்சயம் விரைவில் நடக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் தம்மு.
Powered by Blogger.