கலைந்த முடி, மடித்து விட்ட சட்டை, கையில் காப்பு , தாரை தப்பட்டை - மிரட்டும் தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய கைதி படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் உள்ளார். ஆனால், அதனை கொண்டாட அவருக்கு நேரமில்லை. அந்த அளவுக்கு விறுவிறுப்பாக தளபதி64 படத்தை விஜய் வைத்து இயக்கி வருகிறார்.
புத்தாண்டு வரை தளபதி 64 என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்த படம், வெறும் ஆறு மணி நேரத்தில் நடக்கும் கல்லூரி கதைக்களத்தை கொண்டாத கூறப்படுகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் டெல்லியில் ஆரம்பிக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் மொரட்டு மாஸான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
முட்டி வரை மடித்து விடப்பட்ட சட்டை, கையில் இரும்பு காப்பு, கலைந்த தலைமுடி என முரட்டுத்தனமாக விஜய் நடந்து வந்து கொண்டிருக்க அருகிலேயே தாரை தப்படையுடன் சிலர் நிற்கிறார்கள்.
படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். ஆனால்,தளபதி 64 படத்தில் இருந்து வெளியான இந்த புகைப்படம் தான் உண்மையான ஃபர்ஸ்ட் லுக் என ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது.