இணையத்தில் லீக் ஆன தளபதி 64 படத்தின் கதை - கிளம்பிய சர்ச்சை..!
நடிகர் விஜய் தற்போது மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விஜய்யின் புகைப்படம் லீக்காகியுள்ளது. அதில் கழுத்தில் ஐடி கார்ட் அணிந்து விஜய், மாணவர்களுடன் அமர்ந்திருக்கிறார். பலத்த பாதுகாப்பையும் மீறி எப்படி புகைப்படம் லீக்கானது என்று தெரியாமல் படக்குழு குழம்பி கிடக்கிறது.
இந்த புகைப்படத்தைப் பார்த்தால், அவர் கல்லூரி மாணவராகவோ அல்லது பேராசிரியராகவோ நடிப்பதாகத் தெரிகிறது. கல்லூரி மாணவராக கடைசியாக விஜய், நண்பன் படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இதுவரை பேராசிரியராக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ட படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி இதில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்த படம் அரியலூர் அனிதா-வை மையமாககொண்டு உருவாகவுள்ளது என்று கூறுகிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வினால் மருத்துவர் கனவு தகர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் சர்ச்சையையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. நடிகர் விஜய் கூட அவரது வீட்டிற்கே சென்று அனிதாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்தார். இந்நிலையில், இந்த சம்பவத்தையே படமாக எடுத்து வருகிறார் விஜய் என்று கூறுகிறார்கள்.
மேலும், கல்லூரி மற்றும் கல்லூரி சார்ந்த பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்று வருவதால் தற்போது இருக்கும் கல்வி முறையை சாடும் படமாக இது இருக்கும் என கூறுகிறார்கள்.