தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வெளியான மாஸ் புகைப்படங்கள் - வைரலாக்கும் ரசிகர்கள்


எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு தளபதி 64 படத்தில் நாள் தோறும் புகைப்படங்கள் வீடியோக்கள் லீக் ஆகிய வண்ணம் உள்ளன.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் தளபதி 64 படத்தை விஜய்யின் உறவினர் ஒருவரே தயாரிக்கிறார். 

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.சென்னையில் இருக்கும் வரை எந்த புகைப்படமோ, வீடியோ லீக் ஆகவில்லை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இங்கிருந்தால் நாள் தோறும் புகைப்படங்கள், வீடியோக்கள் லீக் ஆகி வருகின்றன. 


படக்குழு இதில் அக்கறை செலுத்துவது போல இல்லை, விஜய்யின் கெட்டப் முழுமையாக இந்த புகைப்படத்தின் மூலம் ரிவில் ஆகியுள்ளது. கழுத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் ஐடி கார்டை மாட்டியபடி நிற்கும் விஜய் மற்றும் துணை நடிகர்களின் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் நடிகர் விஜய் ஆசிரியர் அல்லது மாணவராக நடிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Blogger இயக்குவது.