இணையத்தில் கசிந்த தளபதி 64 படத்தின் தலைப்பு - தாறு மாறாக எகிறிய எதிர்பார்ப்பு..!
வட சென்னையைத் தொடர்ந்து டெல்லியில் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
விஜய் சேதுபதி மட்டும் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. வரும் டிசம்பர் மாதம் வரை டெல்லியில் நடக்கவுள்ள படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில்,இந்த படம் சம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் என தினமும் இணையத்தில் கசிந்த வந்த நிலையில் தற்போது படத்தின் தலைப்பு குறித்து சில தகவல்கள் வைரலாகி வருகின்றன.
ஆம், படத்திற்கு "நம்ம வாத்தியார்" என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாம் படக்குழு. நடிகர் விஜய் படங்கள் என்றாலே ஒரே வார்த்தையில் தான் தலைப்பு இருக்கும். ஆனால், இந்த தலைப்பில் இரண்டு வார்த்தைகள் வருகின்றன.
வெறுமனே, "வாத்தியார்" என்று தலைப்பு வைக்கலாம் என்றால் ஏற்கனவே 2006-ம் ஆண்டு நடிகர் அர்ஜுன் "வாத்தியார்" என்ற படத்தில் நடித்துள்ளார். இதனால் "நம்ம வாத்தியார்" என்ற தலைப்பை தெரிவு செய்துள்ளதாம் படக்குழு.
இருந்தாலும் ஒரே வார்த்தையில் தலைப்பு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் வேறு தலைப்புகளையும் படக்குழு ஆலோசித்து வருகிறதாம். எது எப்படியோ, இதன் மூலம் நடிகர் விஜய் ஆசிரியராக நடிக்கிறார் என்பது மட்டும் இதன் மூலம் தெரிந்து விட்டது.