விஜய் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த தளபதி64 அப்டேட் - டைட்டில் இது தானா..??


நடிகர் விஜய் தளபதி 64 படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என்று ஒரு பக்கமும், ஆசிரியராக நடிக்கிறார் என்று மறு பக்கமும் ஒரு வேறு யூகங்கள் பறந்து கொண்டிருகின்றன. நடிகர் விஜய் தன்னுடைய பணத்தை போட்டு இந்த படத்தை தயாரித்து நடித்து வருகிறார் என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருகின்றது. 

மேலும், அடிக்கடி படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சில வெளியாக படக்குழு கொஞ்சம் ஷாக்கில் உள்ளனர். இந்த நேரத்தில் தான் சமூக வலைதளங்களில் இப்படத்தின் தலைப்பு இது என நிறைய பெயர்கள் அடிபடுகிறது. 

அதோடு விஜய்யின் 64வது படத்தின் ஃபஸ்ட் மற்றும் டைட்டில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகும் என்று கூறுகிறார்கள். தளபதி ரசிகர்களுக்காக இப்போது ஒரு வைரல் செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வெறித்தனம் போல் விஜய் "சம்பவம்" என ஆரம்பிக்கும் ஒரு பாடலை அனிருத் இசையமைப்பில் பாட இருக்கிறாராம். 

அநேகமாக, இது படத்தின் டைட்டில் ட்ராக்காக இருக்கும் என கூறுகிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது "சம்பவம்" என்பதே படத்தின் பெயராக இருக்கும் என்கின்றனர். ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
Blogger இயக்குவது.