தயவுசெய்து யாரும் ஷேர் செய்ய வேண்டாம் - தளபதி 64 படக்குழு வேண்டுகோள்..!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி64 படத்தின் படப்பிடிப்பு டில்லியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. 

டில்லியில் படமாக்கப்படவேண்டிய காட்சிகள் கிட்டதட்ட முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிந்து, அங்கிருந்து சென்னைக்கு திரும்புகிறது படக்குழு. 

அதனை தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தநேரத்தில், தளபதி64 படத்தின் ஒரு பாடலை கம்போஸ் செய்து விட்டார் அனிருத். 

"சம்பவம்.." என்று தொடங்கும் அந்த பாடலின் சிங்கிள் டிராக்கை விரைவில் வெளியிடயிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி தீயாக பரவியது. 

இதனை அறிந்த படக்குழு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அந்த தகவல் உண்மையில்லை என்று மறுத்துள்ளது. மேலும், தளபதி64 படம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத தகவல்களை ரசிகர்கள் யாரும் தயவுசெய்து ஷேர் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
Blogger இயக்குவது.