தளபதி 64 படம் முடியும் முன்பே சாட்டிலைட் உரிமையை லபக்கிய பிரபல நிறுவனம்..! - அதிகாரபூர்வ அறிவிப்பு..!


பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தளபதி 64 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியும், ஜோடியாக மாளவிகா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்னும் சில நாட்களில் படக்குழு டெல்லியிலிருந்து கர்நாடகாவுக்கு செல்ல இருப்பதாக தெரிகிறது. 

கர்நாடகவில் உள்ள முக்கிய சிறைச்சாலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அங்கு விஜய், விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதும் கூடுதல் தகவல்.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு வாங்கியுள்ளது. இதனை அந்த நிறுவனமே அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
Powered by Blogger.