மாளவிகா,ஆண்ட்ரியா-வை தொடர்ந்து மூன்றாவதாக இணைந்த பிரபல நடிகை - தளபதி 64 ஹாட் அப்டேட்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் ஃபோட்டொ லீக்கானது. 

 பிகில் திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படத்தை ‘கைதி' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஜினியின் ‘பேட்ட' படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். 

இரண்டாவது கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்டனி வர்கீஸ் மற்றும் ‘96' திரைப்படத்தில் இளைய வயது திரிஷாவாக நடித்த கௌரி ஜி கிஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். விஜய்யின் உறவினர் ப்ரிட்டோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்நிலையில், இந்த படத்தின் அங்காடிதெரு படத்தின் மூலம் பிரமான நடிகை அஞ்சலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Blogger இயக்குவது.