ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-64 தெறி மாஸ் அப்டேட்..! - அதிகாரபூர்வ அறிவிப்பு.!


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64. இப்படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கி வருகின்றார். 

ஏற்கனவே லோகேஷ் இயக்கிய கைதி படம் பிகில் படத்திற்கு போட்டியாக வந்தும் மிகப்பெரிய வரவேற்பை தமிழகத்தில் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் முடிந்துவிட்டது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பிரபல சிறைச்சாலை ஒன்றில் நடக்கவுள்ளதாம். 

இதனை தொடர்ந்து, தற்போது படக்குழு தரப்பில் செம்ம மாஸ் அப்டேட் வெளிவந்துள்ளது. கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் இணைந்துள்ளார். ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சியில் இவர்நடிப்பார் என தெரிகின்றது.


Blogger இயக்குவது.