இதுக்குதான் இந்த அட்ஜெஸ்ட்மெண்டா..? தளபதி64 படத்திலிருந்து வெளியேறிய பிரபல நடிகர்..!


பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியும், ஜோடியாக மாளவிகா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்தி முடித்த படக்குழு தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புகாக தயாராகி வருகிறது. அதன்படி இன்னும் சில நாட்களில் கர்நாடகாவில் உள்ள முக்கிய சிறைச்சாலை ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில், இந்த படத்தில் கைதி படத்தில் நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார். கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தான் தளபதி 64 படத்தில் கமிட் ஆகியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு செம்மகுஷி. 

அதே நேரம், படத்தில் ஏற்கனவே கமிட் ஆகியிருந்த ஆண்டனி வர்கீஸ் படத்திலிருந்து வெளியேறியுள்ளார். அவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தான் இப்போது அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக தளபதி64 படத்திலிருந்து ஆண்டனி வர்கீஸ் வெளியேறியதாக கூறுகிறார்கள்.
Blogger இயக்குவது.