தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை பகிர்ந்த மாளவிகா மோகனன் - விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்
மாளவிகா மோகனன் மலையாளம், கன்னடம், ஹிந்தி சினிமாவில் தோன்றினார். பின்னர் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி ஆனார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட ஷூட்டிங் முடிந்து இரண்டாவது ஸ்செடுல் டெல்லியில் நடந்து வருகின்றது.
பிரபல கல்லூரியில் தான் ஷூட்டிங்.ஒரு தினம் முன்பு தான் ஷாட்டுக்கு தயாராகும் போட்டோவை வெளியிட்டார் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில். அடுத்ததாக நேற்று மூன்றாம் நாள் ஷூட்டிங் புகைப்படம் என குறிப்பிட்டு இரவு நேர போட்டோவை பகிர்ந்துள்ளார்.
தளபதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிருங்கள் என விஜய் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.