சமீபகாலமாக தமிழ் சினிமாவை நோக்கி குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க இந்தியா முழுதிலும் இருந்து நடிகைகள் கோலிவுட்டை நோக்கி வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் சமீபத்திய வரவு நடிகை ஹர்ஷதா பாட்டில் (Harshada Patil). மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர்.
நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றை முறையாக கற்றுக்கொண்டிருக்கும் இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருகின்றன. பொதுவாக மும்பை உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் என்றாலே கவர்ச்சி நடிகைகள் தான் என்ற பிம்பம் உள்ளது.
|
Harshada Patil - PC: JOHNNARESH & SKSAI |
ஆனால், சமீப காலமாக குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கவும் மும்பையிலிருந்து மாடல் கம் நடிகைகள் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அதில் தன்னையும் ஒருவராக இணைத்து கொண்டிருக்கிறார் நடிகை
ஹர்ஷதா பாட்டில்.
|
Actress Harshada Patil Harshada Patil - PC: JOHNNARESH & SKSAI |
பிரபல தனியார் விமான சேவை நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டர்ஸ்-ஆக பணியாற்றிய இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு திரைத்துறையை நோக்கி நகர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து, இசை ஆல்பங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ள இவர் கணிசமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
|
Actress Harshada PatilHarshada Patil - PC: JOHNNARESH & SKSAI |
மேலும், பிரபல தொலைக்காட்சியான
HUM TV வருடா வருடம் நடத்தும்
Hum Awards என்ற திரைக்கலைஞர்களுக்கான விருது விழாவில்
"Upcoming Star" என்ற விருதையும் பெற்றுள்ளார் நடிகை ஹர்ஷதா.
|
Actress Harshada PatilHarshada Patil - PC: JOHNNARESH & SKSAI |