இந்த வருடம் தமிழ் சினிமாவின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா..? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!


தமிழ் சினிமாவின் வசூல் மற்றும் வியாபாரம் தமிழகம், இந்தியா தாண்டி உலகம் முழுதும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. ஆம், தமிழ் சினிமாவின் தரமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகின்றது என்பது தான் இதற்க்கான ஒரே காரணம்.

வருஷத்துக்கு 200+ படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் குறைந்த பட்சம் 10 முதல் 15 படங்கள் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் , விமர்சனத்தையும் பெற்று விடுகின்றன.

அதே போல, மக்களை கவரும் படங்களுக்கு வசூலும் குவிகின்றது. அதிலும் தமிழ் சினிமா இந்த 2019-ம் வருடம் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது என்றே சொல்லலாம். 

இந்த வருடத்தின் தொடக்கமே விஸ்வாசம், பேட்ட என இரண்டு பெரிய நடிகர்களின் பாடம் நேருக்கு நேர் மோதியது. ஆனால், இரண்டும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. 

மேலும், பிகில், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வசூலில் மெகா சாதனையை செய்த நிலையில் இந்த வருடம் தமிழ் சினிமா மட்டும் உலகம் முழுவதும் 1300 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது. 

அதிலும் நடிகர் ஜெயம் ரவியின் "கோமாளி", தனுஷ்-ன் "அசுரன்", சிவகார்த்திகேயனின் "நம்ம வீட்டு பிள்ளை", அருண் விஜயின் "தடம்", ராகவா லாரன்சின் "காஞ்சனா 3", கார்த்தியின் "கைதி" ஆகிய படங்கள் எல்லாம் அந்தந்த நடிகர்களின் திரைப்பயணத்தில் அதிகப்பட்ச வசூலாக அமைந்துள்ளது.
Powered by Blogger.