மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணி..! - பீதியில் இருந்த ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதலான விஷயம்..!


நடிகர் சூர்யா இயக்குனர் ஹரி காம்போ என்றாலே ஒருவித எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், ஆறு, வேல், சிங்கம் ட்ரையலாஜி என ஐந்து படங்களில் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடித்துள்ளார் சூர்யா. 

இந்நிலையில், ஆறாவது முறையாக மீண்டும் அமைந்துள்ள இந்த கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் முதல்முறையாக இணைய இருக்கிறார். 

2010-ல் மீண்டும் இவர்கள் கூட்டணியில் சிங்கம் படம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் சூர்யாவின் துரை சிங்கம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு சிங்கம் படத்தின் 2-ம் பாகம் 2013-ம் ஆண்டும், சிங்கம் 3-ம் பாகம் 2017-ம் ஆண்டும் வெளியானது. 

தற்போது மீண்டும் ஹரி - சூர்யா கூட்டணி இணைய இருக்கிறது. இந்த கூட்டணியில் முதல் முறையாக பிரபல இசையமைப்பாளர் இமான் இணைந்திருக்கிறார்.

இந்நிலையில், மீண்டும் சூர்யா - ஹரி இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பெற்றிருந்தாலும் சிங்கம் நான்காம் பாகமாக இருந்துவிடுமோ என்று திகிலில் தான் இருகிறார்கள். 

ஒரு புதிய கதையில் சூர்யா-ஹரி கூட்டணியை பார்க்க ரசிகர்கள் காத்திருகிறார்கள். அவர்களுக்கு இப்போது இருக்கும் ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால் இந்த படம் சிங்கம் 4-ம் பாகம் தான் என்று இன்னும் எந்த தகவலும் உறுதிபடுத்தப்படவில்லை என்பது தான். 

சூரரை போற்று திரைப்படம் வெளியானதும் இந்த படத்தின் அப்டேட்டை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அந்த படத்திற்கு முன்பே இந்த அறிவிப்பை வெளியிட்டால் சூரரை போற்று படத்தின் ரீச் அடிபடும் என நம்புகிறார்கள். இதனால், சூரரை போற்று படம் ரிலீஸ் ஆகும் வரை இந்த படம் குறித்த பெரிய அப்டேட் எதுவும் எதிர்பார்க்க முடியாது.
Blogger இயக்குவது.