மறுபடியும் மொதல்லா இருந்தா..? - சிம்புவின் "மாநாடு" படம் குறித்து தயாரிப்பளர் வெளியிட்ட ஷாக் தகவல்..!
தன்னை சுற்றி ஏதாவது சர்ச்சையை கூட்டிக்கொண்டே சுற்றும் நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருந்த "மாநாடு" படம் ட்ராப் ஆகியதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு சிம்பு "மகா மாநாடு" என்ற படத்தை தானே இயக்கி, தயாரித்து, நடிக்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், மீண்டும் "மாநாடு" படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்திலேயே சிம்பு நடிப்பதாக ஒப்புக்கொண்டதாக செய்திகள் வந்தது.
நடிகர் சிம்பு சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட முதல் நாளன்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சென்று அவருடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார்.
மாநாடு பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார் அவர். இதனால் STR ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், மாலை போட்ட அன்று சிம்புவை பார்த்தது அதன் பிறகு சிம்புவை தொடர்பு கொள்ளவே முடியவில்லை ரிவித்துள்ளார்.
அதனால் சிம்பு "மாநாடு" படத்தில் நடிக்க சிம்பு ஆர்வம் காட்டவில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர். என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே,,! என்று விரக்தியில் இருகிறார்கள் சிம்பு ரசிகர்கள்.