பிகில் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் - படக்குழு அதிரடி முடிவு
நடிகர் விஜய், நடிகை நயன்தாரா மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'பிகில்' படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்றது. மேலும், படத்தில் இடம் பெற்ற ஒரு சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
ஆனால், அது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அதிகம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்து பிகில் படக்குழுவை கழுதறுத்து விட்டனர்.
'மெர்சல், சர்க்கார்' படங்களில் அப்படி சர்ச்சை வந்த போது அது பற்றி பேசப் போய், அதுவே படத்திற்கு இலவச விளம்பரமாகி படத்திற்கு வசூல் அதிகரித்தது. அதனால், இந்த முறை ரசிகர்களைத் தவிர வேறு யாரும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இருந்தாலும் படத்தில் இடம் பெற்ற CM Area என்று கேப்டன் மைக்கேல் என விஜய்யைச் சொல்லும் வசனம், குண்டான பெண் கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவரை 'குண்டம்மா, குண்டம்மா' என விஜய் கிண்டலடிக்கும் காட்சி, பிரமாண குடும்பத்தைக் காட்டிய விதம், ஆகியவற்றிற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் மட்டும் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில் 'குண்டம்மா குண்டம்மா' என்ற வசனம் இடம் பெற்ற காட்சிக்கு அதிக எதிர்ப்புகள் வந்தன. அதனால், அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாம். மேலும், மற்ற சர்ச்சைக்குரிய சில காட்சிகளையும் குறைத்து படத்தின் நீளத்தை 15 நிமிடம் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.