தமிழகத்தில் கோட்டை விட்ட விட்டு கேரளாவில் கோட்டை கட்டிய "பிகில்"..!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பயணித்து கொண்டிருந்தது.
வழக்காக விஜய் படங்கள் என்றாலே மினிமம் கியாரண்டி உண்டு. படம் ஹிட்டோ..? ஃப்ளாப்போ..? ஈஸியாக 100 கோடி என்ற இலக்கை எட்டி விடுகிறது. அப்படி இருக்கும் நிலையில், "பிகில்" ஒரு படமாக தனியாக சாதித்தது என்ன..? படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி விட்டது.
ஆனால், படத்தின் பட்ஜெட் மட்டுமே 180 கோடி. மறுபக்கம் அதே நாளில் வெளியான கைதி திரைப்படம் பட்ஜெட் வெறும் 23 கோடி. ஆனால், வசூல் 47 கோடியை தாண்டியுள்ளது. இதில் எது ஹிட் படம் என்று நாமே கணித்து விடலாம். விஜய் படங்கள் என்றாலே 100-150 கோடி வசூல் உறுதி என்றிருக்கும் நிலையில் பிகில் படம் விஜய்க்கு பெரிய திருப்பத்தை கொடுக்க தவறி விட்டது என்பது தான் உண்மை.
தமிழ்நாட்டில் விஜய்யின் சமகால போட்டியாளராக இருக்கும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெளியான எட்டு நாளில் தமிழத்தில் மட்டும் 125 கோடி ரூபாயை வசூலிக்க, நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் 106 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இத்தனைக்கும், விஸ்வாசம் படத்திற்கு எதிராக நின்றது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட.
ஆனால், பிகிலுக்கு கார்த்தியின் கைதி மட்டுமே. சமூகவலைதளங்கலான யூ-ட்யூப் மற்றும் ட்விட்டர் போன்றவற்றி ஃபர்ஸ்ட்லுக் முதல் ட்ரெய்லர் வரை சாதனை மேல் சாதனை செய்து காட்டிய விஜய் ரசிகர்களுக்கு களத்தில் பிகில் நிலையை கண்டு அதிர்ச்சியாகியிருந்த நிலையில், கேரளாவில் இந்த வருடம் வெளியான தமிழ்படங்களில் முதலிடத்தை பிடித்திருப்பது "பிகில்" படம் தான் என்ற ஆறுதலான தகவல் வந்துள்ளது.
கேரளாவில் வெளியான பிகில் திரைப்படம் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்கும் நல்ல லாபம் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் கோட்டை விட்ட பிகில் கேரளாவில் கோட்டை கட்டியுள்ளது.