பிகில் - லாபமா..? நஷ்டமா..? - இதோ தயாரிப்பளர் அர்ச்சனா கல்பாத்தி-யே கூறிவிட்டார்..!
விஜய்-அட்லி கூட்டணியில் உருவான பிகில் திரைப்படம் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
படம் வெளியானது முதலே பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி வரும் பிகில் திரைப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
படத்தின் வசூல் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் படத்தை தமிழத்தில் வெளியிட்ட ஸ்கிரீன் சீன் நிறுவனம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர் ஆறுமுகம் தி ஹிந்துவுக்கு அளித்த பேட்டியில், பிகில் படம் தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் -செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ஒரு பேட்டியில், பிகில் படத்தின் வசூல் குறித்து ஒரே வாக்கியத்தில் பதில் சொல்லியுள்ளார். அவர் "படம் எங்களுக்கு லாபம் தான். நல்ல profit தான் பண்ணியிருக்கோம்" என்று கூறியுள்ளார்.